உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மம்தா பேனர்ஜி - Agnipuratchi

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மம்தா பேனர்ஜி

Share This

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரைக் கைது செய்ய முயன்ற சிபிஐ நடவடிக்கையைக் கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி 3 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சிபிஐ தொடுத்த வழக்கில் ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அவரைக் கைது⛓ செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள மம்தா பானர்ஜி, இது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். நீதித்துறையையும் மத்திய அரசின் நிறுவனங்களையும் தான் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசியபின் போராட்டத்தைத் தொடர்வதா வேண்டாமா⁉என முடிவுசெய்யப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages