விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த ஒப்புதல் அளித்த இங்கிலாந்து - Agnipuratchi

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த ஒப்புதல் அளித்த இங்கிலாந்து

Share This

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்திச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி விட்டார் என்பது மல்லையா மீதான குற்றச்சாட்டு. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி சிபிஐ சார்பில் இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி, விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டது. டிசம்பர் 10ம் தேதி அன்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த உத்தரவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதற்க்கு அனுமதியளித்து உள்துறை அமைச்சக செயலர் சஜித் ஜாவித் கையெழுத்திட்டுள்ளார். எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages