தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் 2ம் தேதி ஆளுநர் உரையுடன்தொடங்கியது. 8ம் தேதி முதலமைச்சர் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில், 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அவர் 8வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். வழக்கமான பட்ஜெட் போல் இல்லாமல், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றதைப் போல் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், வரிச் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையைமுடித்தபிறகு, இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment