கொல்கத்தா கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை - Agnipuratchi

கொல்கத்தா கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை

Share This

சிட்பண்ட் ஊழல் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை, கொல்கத்தா போலீசார் கைது⛓ செய்தனர். இதனையடுத்து போலீஸ் கமிஷனரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார். இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் மம்தாவுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையை துவக்க வேண்டும் என மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages