சென்னை 🏛உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி - Agnipuratchi

சென்னை 🏛உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி

Share This

சென்னை உயர் நீதிமன்றத்தில் ⚖நீதிபதிகள் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 75 ⚖நீதிபதிகள் பணியிடம் உள்ளது. இவற்றில் 59 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 15 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages