தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளுக்காக கல்லாமொழியில் சுமார் 8 கி.மீட்டருக்கு கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், "நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பதன் காரணமாக ஆலந்தலை பகுதிக்குள் கடல்நீர் புகுந்து விடும். எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடவேண்டும்" என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மீனவர்களும், போராட்டம் நடத்தினர். எனினும் இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், தங்கள் படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும், கடலில் இறங்கி மனித சங்கிலி அமைத்தும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.
Home
அண்மை செய்திகள்
திருச்செந்தூர் அருகே நிலக்கரி இறங்குதளம்-கடலில் இறங்கி போராட்டம் நடத்தும் மீனவர்கள்
திருச்செந்தூர் அருகே நிலக்கரி இறங்குதளம்-கடலில் இறங்கி போராட்டம் நடத்தும் மீனவர்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment