தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து மும்பையில் ரயில் மறியல் - Agnipuratchi

தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து மும்பையில் ரயில் மறியல்

Share This

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து மராட்டிய மாநிலம் மும்பையில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்திக் களைத்தனர். நலசோபரா என்ற இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், அவர்களைக் கட்டுப்படுத்தாத அந்நாட்டு அரசையும் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களுடன் அலுவலகம் செல்வோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து, தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages