விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்-தேர்தல் ஆணையம் - Agnipuratchi

விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்-தேர்தல் ஆணையம்

Share This

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வருவதையொட்டி விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர். மேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages