நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் நடைபெறவில்லை. இதனையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரேமலதா, சுதீஷ் மற்றும் அவர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே னவிஜயகாந்தை அவரது வீட்டுக்கு சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசின் திருநாவுக்கரசர் அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே திருநாவுக்கரசர் சார்பில், அங்கு சென்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது
தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த்தை திடீரென்று சந்தித்த திருநாவுக்கரசர்⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment