பொன்.மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி - Agnipuratchi

பொன்.மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

Share This

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்.மாணிக்கவேலுக்கு தரப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசின் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 3வது முறையாக அவகாசம் கேட்பது ஏற்புடையது அல்ல என்றும் கூறினர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்த நீதிபதிகள் இதற்காக தலைமை செயலர் மற்றும் டிஜிபி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமித்த 104 காவலர்களில் 26 பேர் பணியில் சேர்ந்துள்ளதாகவும், சிலை கடத்தல் தொடர்பாக 174 வழக்கு ஆவணங்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages