வறண்ட மடிப்பாக்கம் 🌊ஏரி-🚰குடிநீர் தட்டுப்பாடு அபாயம்😱 - Agnipuratchi

வறண்ட மடிப்பாக்கம் 🌊ஏரி-🚰குடிநீர் தட்டுப்பாடு அபாயம்😱

Share This

🏛சென்னை நகரைப் பொறுத்தவரை 🌊4 ஏரிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. அவை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஆகும்😯. மேற்கூறிய 4 ஏரிகளிலும் கடந்த 📆மார்ச் மாத நிலவரப்படி, 956 மில்லியன் கன அடி மட்டுமே இருந்தது😳. சென்னையில் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது😟. இதனால் வடசென்னையில் பல இடங்களில் 💦தண்ணீர் பஞ்சம் அதிகம் உள்ளது. அங்கு 🚛லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆதம்பாக்கம், மாதவரம், போரூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது😱. வரும் நாட்களிலும் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது🗣. இந்நிலையில் மடிப்பாக்கம் ஏரியின் 📸புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் வறண்டு போய், ஏராளமான 🐠மீன்கள் செத்துக் கிடக்கின்றன. இதனை கண்டு 😦அதிர்ச்சியடைந்துள்ள 👥பொதுமக்கள் சென்னை நகரின் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை மேற்கொள்ள உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று 🙏கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages