ஈஸ்டர் திருநாள் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுக்கும் வாழ்த்து செய்தி! - Agnipuratchi

ஈஸ்டர் திருநாள் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுக்கும் வாழ்த்து செய்தி!

Share This

அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்று கூறி அன்பையும், சகிப்புத் தன்மையையும் போதித்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறித்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிரியிடத்திலும் அன்பு காட்டு, தவறு செய்தவர்களை மன்னித்து அருள வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட இயேசுபிரான் போதித்த கொள்கைகள் அனைத்தும் உயர்வானவை; உன்னதமானவை ஆகும். அவற்றை பின்பற்றி நடந்தாலே உலகில் துரோகம், மோதல், ஏமாற்றுதல்  உள்ளிட்ட எந்த தீமைக்கும் தேவை இருக்காது. இயேசுபிரானின் போதனைகளை மதிக்கத் தவறியதே உலகில் நடந்த அனைத்து மோதல்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

எந்திரமயமாகி விட்ட இன்றைய உலகில் அன்பு செலுத்துவதே அரிதாகி விட்ட நிலையில், உலகை அன்பு நிறைந்ததாக மாற்றுவதற்கு அவசியத் தேவை இயேசுபிரானின் போதனைகள் தான். எனவே,  உலகில் அமைதி, வளம், நல்லிணக்கம், எதிரிக்கும் உதவும் குணம், சகோதரத்துவம், சகிப்புத் தன்மை ஆகியவற்றை பெருக்க இயேசுவின் போதனைகளை பின்பற்ற இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages