திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒட்டன்சத்திரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது முதல்வர் பேசுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்படுகிறார். தந்தையின் ஆதரவின் அடிப்படையில் அரசியலுக்கு கொல்லைப்புறமாக ஸ்டாலின் உள்ளே வந்தார்.
ஆனால் நான் உழைத்து பதவிக்கு வந்தேன். சாதாரண தொண்டன் முதல்வரானால் அதை கேவலமாக பேசுவதா. மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நான் திருப்பி பேசினால் காது சவ்வு கிழிந்துவிடும். அரசியலில் என்னுடன் நேருக்கு நேர் மோதுங்கள். நான் அதற்கு உண்டான பதில்களை கூறுகிறேன். நாங்கள் மக்களை சந்தித்து இந்த திட்டங்களை செய்கிறோம், அதை செய்கிறோம் என சொல்கிறோம். ஆனால் ஸ்டாலினோ பொதுக் கூட்டத்துக்கு போனாலே பிரதமரை திட்டுவது, என்னை திட்டுவது, எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வது இதுதான் என்றார் முதல்வர்.
No comments:
Post a Comment