📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே , 12 ஞாயிறு 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே , 12 ஞாயிறு 🗓

Share This

தமிழ்ச்சொல் அறிவோம்

சிலை - படிமம்
➖➖➖➖➖➖➖➖➖➖
நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது

புதுடில்லி:தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ஆறு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக, அக்கட்சியின் டில்லி வேட்பாளரின் மகன், பகீர் புகார் கூறியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர் மரணம்; போலீசார் விசாரணை

புதுடில்லி: பணம் மற்றும் பதவிக்காக மக்களை ஏமாற்றுகிறார் என டில்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் மீது அன்னாஹசாரே குற்றம் சாட்டி உள்ளார்.

நாடு முழுவதும் வருகிற 23-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்துக்கு கூடுதல் துணை ராணுவ படை வீரர்கள் வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் - சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் இடையே ரகசிய உறவு உள்ளது தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

இந்திய விமானப்படைக்கு நவீன தாக்குதல் ஹெலிகாப்டர் - போயிங் நிறுவனம் முறைப்படி ஒப்படைத்தது

‘குட்கா’ ஊழல் வழக்கு: தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லாவிடம் சி.பி.ஐ. விசாரணை

பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை - மம்தா பானர்ஜி மீண்டும் விளக்கம்

அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள், தளவாடங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்துள்ளன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒருவர் சாவு

மக்களவைத் தேர்தல்: இந்தியா முழுவதும் இதுவரை 3,399.33 கோடி பறிமுதல்... முதலிடத்தில் தமிழகம்

வெனிசூலா நாட்டில் கைதான நாடாளுமன்ற துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு

தமிழக பஸ் எரிப்பு வழக்கு என்ஐஏ நீதிமன்றம் விசாரணை தொடங்கியது: சூபியா மதானி உள்பட 6 பேர் ஆஜர்

ஆப்கானிஸ்தானில் தலீபான் சிறையில் இருந்து 10 அப்பாவி மக்கள் மீட்பு - ராணுவம் அதிரடி

விண்வெளியில் இந்தியா நடத்திய தாக்குதலில் சிதறிய செயற்கைக்கோளின் துண்டுகள் பெரும் பகுதி அழிந்து விட்டன: டிஆர்டிஓ தலைவர் விளக்கம்

7 மாநிலங்களில் 59 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த கேரள சினிமா இயக்குநர்: கொலையா என போலீஸ் விசாரணை

மத்தியில் வலிமையான அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும் - உத்தரபிரதேசத்தில் மோடி பிரசாரம்

ராமேஸ்வரம்-புவனேஸ்வர் விரைவு ரயில் புறப்பாடு தாமதம்: பயணிகள் அவதி

தேர்தல் கமி‌ஷன் பாரபட்சமாக செயல்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவை, குமரி அரசு மருத்துவ கல்லூரியில் அடுத்த கல்வியாண்டில் தலா நூறு எம்பிபிஎஸ் சீட் அதிகரிக்க முடிவு: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

பிளஸ்-1, பிளஸ்-2 மொழி பாட திட்டங்களில் இருமொழி கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பிரமாண்ட சிலை பயணத்திற்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

சேலத்தில் 16 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து - வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

மகளிர் டி20 சேலஞ்ச் சூப்பர் நோவாஸ் சாம்பியன்

அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மீது தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கடும் குற்றச்சாட்டு, கோஷ்டி பூசல் வெடித்தது

உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு 2 எம்எல்ஏக்களுடன் டிடிவி சமாதானம்: முன்னாள் எம்எல்ஏக்கள் 18 பேர் புலம்பல்

ஆத்தூர் அருகே, பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி தீப்பிடித்ததில் தந்தை-மகள் பரிதாப சாவு: 2 பேர் படுகாயம்

முறைகேட்டில் ஈடுபட்ட 35 குடிநீர் வாரிய லாரிகள் சிக்கின: சென்னை குடிநீர் வாரியம் அதிரடி

அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்: ஸ்டாலின் பச்சை பொய் பேசி வாக்காளர்களை ஏமாற்ற பார்க்கிறார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரசுக்கு எதிராக பேசியதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது வழக்கு: போலீசார் விசாரணை

ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் மறுவாக்குப்பதிவை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது: ‘சென்னை அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ கேப்டன் டோனி பாராட்டு

அரசு குடியிருப்பை காலி செய்யும்படி நல்லகண்ணு, கக்கன் மகனுக்கு நோட்டீஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி

எஞ்சிய வாழ்நாள் மக்களுக்காகவே: கமல்ஹாசன்

‘களவாணி-2’ பட விவகாரம்: நடிகர் விமல் மீது ரூ.1½ கோடி மோசடி புகார்

விவசாயிகளின் பெயரில் மோசடி: சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை தேவை வைகோ

நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜராகவில்லை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார்- சத்திய நாராயணன்

விராத் கோலி, காம்பீர் வரிசையில் நின்று வாக்களிப்பு

ரூ.2½ கோடி கூடுதல் செலவானதாக புகார்: விஷாலின் ‘அயோக்யா’ திரைக்கு வருவது திடீர் ரத்து

சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் மோடியின் கருத்து

வறட்சி பாதித்த மாவட்டங்களில் ‘வேலை உறுதி திட்டத்தை விரைந்து செயல்படுத்துங்கள்’ மாவட்ட கலெக்டர்களுக்கு, பட்னாவிஸ் உத்தரவு

நடுவானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு மும்பை விமானம் அவசரமாக தரையிறங்கியது பயணிகள் உயிர் தப்பினர்

கோடை வெயிலின் தாக்கத்தால் ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரே மாதத்தில் ரூ.1.84 கோடி வருவாய்

ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து நான் விலகவில்லை ‘தேவேகவுடா என்னை நீக்கினார்’ சித்தராமையா பரபரப்பு பேட்டி

13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு

‘நிகில் எல்லிதியப்பா’ என்ற தலைப்பில் படம் எடுத்தால் நான் ஹீரோ, மந்திரி சி.எஸ்.புட்டராஜு தயாரிப்பாளர் நிகில் குமாரசாமி பேச்சு

திரை நட்சத்திரங்கள் தங்களுடைய அம்மாக்களுடன், அன்னையர் தினத்தை கொண்டாடினர்கள்

ரெசார்ட்டில் குமாரசாமி ஓய்வெடுப்பது தவறு இல்லை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சொல்கிறார்

மணிக்கு 4000 கி.மீ வேகம்: புல்லட் ரயில்: ஜப்பான் அசத்தல்.!

ராய்ச்சூர் என்ஜினீயரிங் மாணவி மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் தற்கொலை செய்தததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

சாலையோர டீக்கடையில்.. அமைச்சர்களுடன் டீ சாப்பிட்ட முதல்வர்

வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி; விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஆய்வு, நாராயணசாமி கடும் எதிர்ப்பு

திமுக குடும்பம் களவாணி குடும்பம்.. தினகரன் தீயசக்தி.. எச். ராஜா பாய்ச்சல்

தேர்தல் ஆணைய உத்தரவின்படி வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு

அபாயா அணிந்த ஆசிரியைகள் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை! - அமைச்சர் மனோ கணேசன்

ஜிப்மரில் பணியிடங்களில் புதுவையை சேர்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

“பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுங்கள்” - மாயாவதி ஆவேசம்

கண்டமங்கலம், சாலையின் குறுக்கே பாம்பு சென்றதால் விபரீதம்: அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு

“நல்லகண்ணுவுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.46 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.88 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages