பிரதமர் மோடியை சந்தித்தார்👀 அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 🤵மைக் பாம்பியோ - Agnipuratchi

பிரதமர் மோடியை சந்தித்தார்👀 அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 🤵மைக் பாம்பியோ

Share This

இந்தியா- அமெரிக்கா இடையேயான 💸பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில் 🇮🇳இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 🤵மைக் பாம்பியோ, 🏛டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்🗣. இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான💪 பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்😯. இதேபோல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் 🤵மைக் பாம்பியோ சந்தித்து பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, இறக்குமதி 💸வரி விதிப்பு, பாதுகாப்பு, எச்1பி விசா போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. வரும் 📆28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் 👥ஜி-20 மாநாடுக்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தை🗣 நடத்த உள்ள நிலையில் மோடி, 🤵மைக் பாம்பியோவின் இந்த சந்திப்பு👀 முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages