இதுவரை இல்லாத அளவு ஈரான் மீது பொருளாதாரத் தடை - டிரம்ப்: - Agnipuratchi

இதுவரை இல்லாத அளவு ஈரான் மீது பொருளாதாரத் தடை - டிரம்ப்:

Share This

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான்- அமெரிக்கா இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்த நிலையில், உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் இரு நாடுகளுக்கு இடையே போர்ப்பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், இதுவரையில் இல்லாத அளவில் ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரான் மீதும் அந்நாட்டு தலைவருக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், ஈரானுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனும் அமெரிக்கா மோதலை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து ஈரான் மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஆணையில் அவர் கையொப்பமிட்டார்.

அமெரிக்கா, ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் 25 செண்ட் உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages