👥7 பேர் விடுதலை 💺ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது-🏛தமிழக அரசு பதில்🗣 - Agnipuratchi

👥7 பேர் விடுதலை 💺ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது-🏛தமிழக அரசு பதில்🗣

Share This

ராஜீவ்காந்தி 🔪கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி 💺ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. கடந்த 📆எட்டு மாதங்களாக இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை😳 எனக் கூறி, 🏛தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு🗣 ஒப்புதல்✍ வழங்க ஆளுநருக்கு உத்தரவிட⚖ வேண்டும் என நளினி தரப்பில் சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது🚫" என்று வாதிட்டார். 
🏛தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது❌ என்றும் அவருக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பதாகவும் வாதிட்டார்😯. மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை அது ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும்😐 குறிப்பிட்டார். இதனையடுத்து நீதிபதிகள், ✍எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டு⚖, இந்த 📜மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா⁉என்பது குறித்த உத்தரவை 📆தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages