காஷ்மீரில் நிலைமை சீரானதும் மீண்டும் மாநில அந்தஸ்தை பெறும்! தற்போது இடைக்கால நடவடிக்கை தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது ராஜ்யசபாவில் விவாதங்களுக்கு பதிலளித்து அமித்ஷா. - Agnipuratchi

காஷ்மீரில் நிலைமை சீரானதும் மீண்டும் மாநில அந்தஸ்தை பெறும்! தற்போது இடைக்கால நடவடிக்கை தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது ராஜ்யசபாவில் விவாதங்களுக்கு பதிலளித்து அமித்ஷா.

Share This

ஜம்மு காஷ்மீரின் நில மதிப்பு ரூ.3 லட்சத்தை தாண்டுவதில்லை.
பிற மாநிலங்களில் நிலத்தின் விலை ரூ.10 லட்சம் என்றால், காஷ்மீரில் ரூ.3 லட்சமாக இருக்கிறது.

370 பிரிவை ரத்து செய்வதன் மூலம் பெண்களுக்கு மிகுந்த நன்மை ஏற்படும். ஜம்மு காஷ்மீரில் சிறந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள் இல்லை, எந்த துறையிலும் முன்னேற்றம் காண முடியவில்லை.

பெரிய பெரிய நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய முயல்கின்றன, ஆனால் கடந்த காலங்களில் அது நிறைவேறவில்லை. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு காரணமே 370-வது பிரிவுதான்.

எந்த மதத்தையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீடிப்பதால்தான் தீவிரவாதம் தொடருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்கள் பிரதமராக முடியும்; ஆனால் பிற மாநிலங்களில் பிறந்தவர்கள் அங்கு ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியாது.

மதத்தை பார்த்து சட்டம் கொண்டு வரவில்லை; காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். 370 சட்ட பிரிவால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.

சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages