நீட் ✍தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் 🏛பெரம்பலூர் 👩மாணவி தற்கொலை. - Agnipuratchi

நீட் ✍தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் 🏛பெரம்பலூர் 👩மாணவி தற்கொலை.

Share This

🏛பெரம்பலூர் தீரன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற 🏛அரசு 🚌போக்குவரத்து கழக நடந்துனர் 👴செல்வராஜ், இவரது மகள் 👩கீர்த்தனா (19). இவர் கடந்த 📆2017-18ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு ✍பொதுத் தேர்வில் 1054 மதிப்பெண் பெற்று 💉மருத்துவ கல்விக்காக நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றார்😟. மருத்துவராவதே தனது லட்சியமாக கொண்ட மாணவி 👩கீர்த்தனா, அதற்காக சென்னையில் நீட் பயிற்சி 🏢மையம் ஒன்றில் தொடர் பயிற்சி பெற்று இந்தாண்டு ✍நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றுள்ளார்😯. இந்நிலையில் மருத்துவ கல்விக்கான நேர்க்காணல்👀 நேற்றுடன் நிறைவுற்ற நிலையில் இறுதி வரை காத்திருந்தும் 💉மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில்🙄 மாணவி கீர்த்தனா இன்று தனது 🏡வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை😱 செய்து கொண்டார். இந்நிலையில், ✍பொதுத் தேர்வில் தன்னை விட குறைந்த 🔢மதிப்பெண் பெற்ற சக மாணவிக்கு நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்வி கிடைத்துள்ள நிலையில்😐 சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு பயின்று இரண்டு முறை நீட் தேர்வு எழுதி போராடியும்💪 தனக்கு மருத்துவ கல்வி கிடைக்கவில்லை😒 என்ற மன உளைச்சலில் 👩கீர்த்தனா இந்த முடிவுக்கு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்🎙. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் 👮போலீசார் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages