கல்லணையில் இருந்து 🌾டெல்டா பாசனத்திற்கு 💦தண்ணீர் திறப்பு🎉 - Agnipuratchi

கல்லணையில் இருந்து 🌾டெல்டா பாசனத்திற்கு 💦தண்ணீர் திறப்பு🎉

Share This

🏛கர்நாடகாவில் கடந்த சில 📆நாட்களாக பெய்து வரும் ☔கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால், காவிரி ஆற்றில் உபரி நீர்💦 திறக்கப்பட்டது. இதனால், 🌊மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது⏫. இதனையடுத்து, கடந்த 📆13ம் தேதி காவிரி டெல்டா பகுதியில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணையை வந்தடைகிறது. இதையடுத்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் ஒரு போக சம்பா சாகுபடிக்காக 🌊தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழாவில்🎉 அமைச்சர்கள் துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஓ.எஸ்.மணியன் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர். மேலும் பொதுப்பணித்துறை வேளாண்மைத் துறை சார்ந்த அதிகாரிகள், 🌾விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடந்த 📆8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திறக்கப்படும் 🌊தண்ணீர் கடைமடை வரை சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 🌾விவசாயிகள் 🙏கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த 💦தண்ணீர் திறப்பின் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் 🏛மாவட்டங்களில் 🏝12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும்👍 என எதிர்பார்க்கபப்டுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages