🏛கர்நாடக மாநிலத்தின் 🌊காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ☔கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன😯. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, 💦தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 🌊காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து மட்டும் ⌚வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி 💦நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது😳. சுற்றுலா 👥பயணிகள் குளிக்கவும், ⛵பரிசல் இயக்கவும் தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு தற்போது வினாடிக்கு 5,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மேட்டூர் அணைக்கு ⌚வினாடிக்கு 5,097 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது👍. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 53.98 அடியாக அதிகரித்துள்ளது⏫ குறிப்பிடத்தக்கது.
🌊காவிரியில் 💦பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment