சிதம்பர ரகசியம் ௭ன்ன?
💥💥💥
ஐ.௭ன்.௭க்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதுவே இந்தியாவெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நீதிமன்றம் மேற்கோள் காட்டியது போல இதை ஒரு கிளாசிக்கல் வழக்காகவே கருதலாம். ஏனெனில் இது 2007-ல் நடந்த சம்பவம். இதே வழக்கில் தான் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தன் மகளை கொன்ற வழக்குக்காக சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி இப்போது அரசு தரப்பு சாட்சியமாக மாறி இருப்பது ப.சிதம்பரத்தை கடும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.
2007-ம் ஆண்டு ஐ.௭ன்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குனர்களாக இருந்த இந்திராணி முகர்ஜியும் பீட்டர் முகர்ஜியும் அந்நிய நேரடி முதலீட்டு ஆணையத்திடம் ஒரு கோரிக்கை விடுத்தனர். அதில் மொரிஷியஸ் ஐ சேர்ந்த நிறுவனத்திடமிருந்து அந்நிய முதலீடாக சுமார் 300 கோடி ரூபாயை பெற அனுமதி கேட்டனர். ஆனால் ஆணையம் வெறும் 4 கோடிக்கு மட்டுமே அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அப்போதைய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தை இருவரும் அணுகி அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டை பெற கோரிக்கை விடுத்தனர். சிதம்பரம் இதற்கான கைமாறாக தன் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த உதவுமாறு கேட்டுள்ளார். அதன்படி கார்த்திக் சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் எனும் நிறுவனத்திற்காக ஒரு பெரிய அளவிலான தொகையை லஞ்சமாக கொடுத்துள்ளனர். பிறகு சட்டவிரோதமாக ரூ.305 கோடியை மொரீசியசை சேர்ந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து அந்நிய முதலீடாக பெற்றுள்ளனர்.
இந்த பிரச்சினையை 2008-ம் ஆண்டே சிபிஐ எழுப்பியது. ஆனால் அப்போது ஆட்சிப் பொறுப்பில் ப.சிதம்பரம் இருந்ததால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவில்லை. நீறு பூத்த நெருப்பாக இருந்த இந்த வழக்கு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு விசாரணைக்கு வந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை தேடி வந்தனர். அப்போது கார்த்திக் சிதம்பரத்தின் அலுவலகத்தை சோதனையிட்டபோது அதில் பத்து லட்சம் ரூபாய் ஐ.என்.எக்ஸ் மீடியா சார்பில் பெற்றதற்கான வவுச்சர் சிக்கியது. இதைத்தொடர்ந்து 2017- ம் ஆண்டு சிபிஐ முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்தது. 2019-ல் இதற்காக கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பான 55 கோடி மதிப்புடைய கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. கடந்த ஜூலையில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி சுமார் ஒரு மில்லியன் யு.எஸ் டாலரை கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு லஞ்சமாக கொடுத்ததாக கூறியுள்ளார்.
பொருளாதார நிபுணர், மூத்த வக்கீல், உள்துறை மந்திரி, நிதி மந்திரியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர், ௭ன பன்முகத்தன்மை கொண்ட ப.சிதம்பரம் இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முயன்று வருகிறார். இந்த வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கம், அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக ப. சிதம்பரம் கூறினாலும் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்ததற்கு ப.சிதம்பரம் மையப்புள்ளியாக இருந்துள்ளார் என்றே கருதப்படுகிறது. சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள *ப.சிதம்பரத்தின் சிதம்பர ரகசியம்* *நீதிமன்றத்தில்* *விரைவில் அம்பலமாகும்*.
இவண்
ஜீ🏹பா.சிதம்பர ரகசியம் ௭ன்ன?
💥💥💥
ஐ.௭ன்.௭க்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதுவே இந்தியாவெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நீதிமன்றம் மேற்கோள் காட்டியது போல இதை ஒரு கிளாசிக்கல் வழக்காகவே கருதலாம். ஏனெனில் இது 2007-ல் நடந்த சம்பவம். இதே வழக்கில் தான் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தன் மகளை கொன்ற வழக்குக்காக சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி இப்போது அரசு தரப்பு சாட்சியமாக மாறி இருப்பது ப.சிதம்பரத்தை கடும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.
2007-ம் ஆண்டு ஐ.௭ன்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குனர்களாக இருந்த இந்திராணி முகர்ஜியும் பீட்டர் முகர்ஜியும் அந்நிய நேரடி முதலீட்டு ஆணையத்திடம் ஒரு கோரிக்கை விடுத்தனர். அதில் மொரிஷியஸ் ஐ சேர்ந்த நிறுவனத்திடமிருந்து அந்நிய முதலீடாக சுமார் 300 கோடி ரூபாயை பெற அனுமதி கேட்டனர். ஆனால் ஆணையம் வெறும் 4 கோடிக்கு மட்டுமே அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அப்போதைய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தை இருவரும் அணுகி அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டை பெற கோரிக்கை விடுத்தனர். சிதம்பரம் இதற்கான கைமாறாக தன் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த உதவுமாறு கேட்டுள்ளார். அதன்படி கார்த்திக் சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் எனும் நிறுவனத்திற்காக ஒரு பெரிய அளவிலான தொகையை லஞ்சமாக கொடுத்துள்ளனர். பிறகு சட்டவிரோதமாக ரூ.305 கோடியை மொரீசியசை சேர்ந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து அந்நிய முதலீடாக பெற்றுள்ளனர்.
இந்த பிரச்சினையை 2008-ம் ஆண்டே சிபிஐ எழுப்பியது. ஆனால் அப்போது ஆட்சிப் பொறுப்பில் ப.சிதம்பரம் இருந்ததால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவில்லை. நீறு பூத்த நெருப்பாக இருந்த இந்த வழக்கு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு விசாரணைக்கு வந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை தேடி வந்தனர். அப்போது கார்த்திக் சிதம்பரத்தின் அலுவலகத்தை சோதனையிட்டபோது அதில் பத்து லட்சம் ரூபாய் ஐ.என்.எக்ஸ் மீடியா சார்பில் பெற்றதற்கான வவுச்சர் சிக்கியது. இதைத்தொடர்ந்து 2017- ம் ஆண்டு சிபிஐ முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்தது. 2019-ல் இதற்காக கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பான 55 கோடி மதிப்புடைய கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. கடந்த ஜூலையில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி சுமார் ஒரு மில்லியன் யு.எஸ் டாலரை கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு லஞ்சமாக கொடுத்ததாக கூறியுள்ளார்.
பொருளாதார நிபுணர், மூத்த வக்கீல், உள்துறை மந்திரி, நிதி மந்திரியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர், ௭ன பன்முகத்தன்மை கொண்ட ப.சிதம்பரம் இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முயன்று வருகிறார். இந்த வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கம், அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக ப. சிதம்பரம் கூறினாலும் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்ததற்கு ப.சிதம்பரம் மையப்புள்ளியாக இருந்துள்ளார் என்றே கருதப்படுகிறது. சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ப.சிதம்பரத்தின் சிதம்பர ரகசியம் நீதிமன்றத்தில் விரைவில் அம்பலமாகுமா? அல்லது புஸ் என்று போகுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.
No comments:
Post a Comment