15. தூக்கி எரியும் பிளாஸ்டிக் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்! - மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல். - Agnipuratchi

15. தூக்கி எரியும் பிளாஸ்டிக் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்! - மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.

Share This

தமிழ்நாடு அரசு தூக்கி எறியும் பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மேலும் விரிவாக்கி, முழுமையாக செயல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மிக அவசியமான தடையை தமிழ்நாடு அரசும் உள்ளாட்சிகளும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும்

முதன்மையான கார்ப்பரேட் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யும் பொருட்களால் உருவாகும் குப்பையை மேலாண்மை செய்வதற்கு, அந்த நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய பிளாஸ்டிக் குப்பைக்கான சட்டம் கூறுகிறது. இதனை செயலாக்குவதற்கான அதிகாரம் உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் உள்ளன. குப்பைகள் உருவாவதை தடுக்கும் இந்த முக்கியமான  உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் வழிமுறையை தமிழ்நாட்டில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages