🌊மேட்டூர் அணையின் 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫ - Agnipuratchi

🌊மேட்டூர் அணையின் 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫

Share This

🌊மேட்டூர் அணையின் நீர்வரத்து ⌚வினாடிக்கு 35,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது⏫. நீர்வரத்து💦 அதிகரிப்பால் அணை விரைவில் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது😳. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 117.050 அடியாக உள்ளது😯. அணையின் நீர் இருப்பு - 88.842 டி.எம்.சி மற்றும் தற்போது வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு 18,700 கன அடியாக உள்ளது😐. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் ☔கனமழை பெய்து வருகிறது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் 🌊அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து 💦உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது🙄. இந்த உபரி நீரானது, 🏛தமிழக எல்லையான 🌊பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்துள்ளது😌. அதன் நீர்வரத்து ⌚வினாடிக்கு 58,000 கன அடியாக உள்ளது. இந்த நீர் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும்😦. இதே நிலை நீடித்தால், அடுத்த 📆3 நாட்களுக்குள் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. இன்று காலை நிலவரப்படி 🌊மேட்டூர் அணையில் 116. 74 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 117 அடியாக உயர்ந்துள்ளது⏫ குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages