🚀‘விக்ரம் லேண்டர்’ 🌕நிலவில் தரையிறங்கும் இடத்தில் தகவல் தொடர்பு துண்டிப்பு😱  - Agnipuratchi

🚀‘விக்ரம் லேண்டர்’ 🌕நிலவில் தரையிறங்கும் இடத்தில் தகவல் தொடர்பு துண்டிப்பு😱 

Share This

🚀சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ 🌕நிலவில் தரையிறங்கும் நிகழ்வு பற்றிய 📰செய்தி சேகரிக்கவும், 📷படம் பிடிக்கவும் பெங்களூருவில் உள்ள 🏢பீனியா செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான ✍பத்திரிகையாளர்களோடு, வெளிநாட்டு நிருபர்களும் நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு தனி அரங்கில் நிகழ்வை 👀காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, 'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்கி இருக்க வேண்டும் என்ற நிலையில், இது குறித்த தகவல் எதுவும் புலப்படவில்லை😟. இதனால் இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் உச்சகட்ட பரபரப்பில்😨 விஞ்ஞானிகள்🤵 உள்ளனர். எனினும் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும்🔈 வரவில்லை🚫 என்பது

🚀சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ 🌕நிலவில் தரையிறங்கும் நிகழ்வினை காண அந்த லேண்டர் 🌕நிலவில் கால் பாதிக்கும் தருவாயில் தகவல் தொடர்பின் 💻சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் என்ன நேர்ந்தது என்ற நிலைப்பாடு தெரியாமல் தகவலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர் 😳. இதற்கிடையே பிரதமர் மோடி,
பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாட்டு மக்களுக்கு பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்துடன் தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. "நம்பிக்கையை இழக்க வேண்டாம், உங்கள் முயற்சி சாதாரணமானவை அல்ல🚫. இஸ்ரோ 🤵விஞ்ஞானிகளை கண்டு இந்தியா பெருமை படுகிறது👏" என்றும், தைரியமாக இருங்கள்👍 என்றும் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல நாட்கள் உழைத்துள்ளனர் ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையுடன் பணியாற்றினீர்கள். கடைசி நிமிடத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டது அது தோல்வி அல்ல

உங்கள் உழைப்பு நாட்டை தலைநிமிர வைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியா தலை நிமிர இஸ்ரோவின் பங்கு முக்கியமானது. சிறு சிறு சறுக்கல் நம் இலக்கை அடைய தடையாக இருக்காது. உங்களுடன் நான் இருக்கிறேன் - பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஊக்கம். மேலும் அங்கு வந்திருந்த 👥மாணவர்களுடன் பேசிய🗣 மோடி, அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார்😐 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages