✍நீட் ஆள்மாறாட்டம் - மேலும் ஒரு 👤மாணவர் ⛓கைது - Agnipuratchi

✍நீட் ஆள்மாறாட்டம் - மேலும் ஒரு 👤மாணவர் ⛓கைது

Share This

மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் ✍தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவன் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரி 🏥மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தேனி 👮‍♂காவல்துறையினர் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து 🗣விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. உதித் சூர்யா ஏற்கனவே அவரது குடும்பத்தினருடன் ⛓கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு 🏥மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவனின் தந்தையை காவல்துறையினர் நேற்று கைது செய்த நிலையில், இன்று இர்ஃபானை சேலம் தீவட்டிப்பகுதியில் 👮‍♀காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இர்ஃபான் மற்றும் அவரது தந்தை இருவரையும் தேனி சிபிசிஐடி அலுவலத்திற்கு அழைத்து சென்று 🗣விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages