வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய - மருத்துவர் இராமதாசு டுவிட்டர் பதிவுகள் (02.10.2019) - Agnipuratchi

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய - மருத்துவர் இராமதாசு டுவிட்டர் பதிவுகள் (02.10.2019)

Share This

1. தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல். அதேநேரத்தில் தீண்டாமை குறித்த பொய்யான புகாரில் அப்பாவிகளை கைது செய்வது பெரும் பாவச்செயல், மாபெருங்குற்றம், மிருகத்தனமான நடவடிக்கை.

2. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் மீது விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப்பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தைப் பிடுங்கும் செயல் ஆகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ற ஆயுதத்துடன் அப்பாவிகள் வேட்டையாடப்படுவதற்கே இது வழி வகுக்கும்!

3. வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும், பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் ஜாதி அமைப்பின் தவறு அல்ல... மனிதத்தின் தோல்வி என்றால் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை அல்லவா? அவ்வாறு செய்யாதது உச்சநீதிமன்றத்தின் தோல்வி அல்லவா?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages