தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மாமனார் காளியண்ணன் அவர்கள் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இது தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு ஆகும். மாமனாரை இழந்து வாடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment