முரசொலி நிலம் குறித்த உரிய ஆதாரங்களுடன் ஆணையத்திடம் சமர்பித்தோம்.
ஆனால் மனுதாரர் தரப்பில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதால் கால அவகாசம் கேட்டுள்ளனர். அதேபோல தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
இந்த விசாரணை இன்றுடன் முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம்.
மேலும் , இந்த அனைத்திற்கு இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் அளிக்கும் புகாருக்கு விசாரணை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இருக்கும் இடம் , தமிழக முதல்வர் இருக்கும் இடம் , பாஜக தலைமை அலுவலகம் இவைகள் அனைத்தும் பஞ்சமி நிலம் என்று சொன்னால் விசாரிப்பார்களா என்று கேட்டோம் அதற்கு எந்த பதிலும் ஆணையத்திடமிருந்து வரவில்லை.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்த மனுதாரர் சீனிவாசன் மீது திமுக சார்பாக மானநஷ்டஈடு வழக்கு தொடர்வோம்.
மேலும் இது குறித்து எப்போது விசாரணை அழைத்தாலும் நாங்கள் வர தயாராக இருக்கிறோம்.
No comments:
Post a Comment