சமூக நீதிக் காவலர் பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை;- - Agnipuratchi

சமூக நீதிக் காவலர் பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை;-

Share This
சமூக நீதிக் காவலர் பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை;-
  தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை
மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்!
                         
  இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய  மருத்துவக் குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. இது மிகவும் குறைவான கட்டணம் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் செய்திகள் பரப்பப்படும் நிலையில், உண்மையில் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள கட்டணம் மிகவும் அதிகமாகும். இது ஏழை, நடுத்தர மாணவர்களை சுரண்டுவதற்கே வழி வகுக்கும்.

இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி தனியார் கல்லூரிகளில் உள்ள 50% மருத்துவப்படிப்பு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.8 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு ஆண்டுக்கட்டணமாக  ரூ.30 லட்சம் வரை வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 50% இடங்களுக்கு கல்லூரி நிர்வாகமே விருப்பம் போல கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் சலுகை காட்டப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தான் பயனளிக்குமே தவிர மக்களுக்கு பயனளிக்காது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages