கர்நாடகத்தில் வன்னியர் வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் மருத்துவர் அன்புமணி இரமாதாஸ் கலந்துக் கொண்டு சிறப்புரை. - Agnipuratchi

கர்நாடகத்தில் வன்னியர் வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் மருத்துவர் அன்புமணி இரமாதாஸ் கலந்துக் கொண்டு சிறப்புரை.

Share This

கர்நாடக மாநில வன்னிய குல ஷத்திரியர் சேவா சங்கம் சார்பில் வன்னியர் புராணம். கர்நாடகத்தில் வன்னியர் வரலாறு உள்ளடக்கிய அக்கினி என்ற நூல் வெளியீட்டு விழா பெங்களூரில் உள்ள ஜெ.என். டாடா ஆடிட்டோரியம் அரங்கில் கர்நாடக மாநில வன்னிய குல ஷத்திரியர் சேவா சங்கம் தலைவர் க.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.  கலைநிகழ்ச்சியுடன் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது. இவ்விழாவில் 
சிறப்பு அழைப்பாளராக கர்நாடக முதல்வர் எடையூரப்பா, பாட்டாளிகட்சியின் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணிஇராமதாஸ் அவர்கள் கலந்துக்கொண்டு அக்கினி நூல் வெளியீட்டனர். மருத்துவர் அன்புமணிஇராமதாஸ் அவருக்கு  வன்னிய குல ஷத்திரியர் சேவா சங்கம் சார்பில் ராஜாமரியாதை அளிக்கப்பட்டது. இவர் உலகளவில் பல விருதுகளை வாங்கியிருக்கலாம். அது எல்லாவற்றையும் விட சமூகத்தில் கிடைக்கும் இந்த கௌரவம் மிகப்பெரியது, நம்பிக்கைக்குரியது. தேர்தல் அரசியல் கடந்து இணைய வேண்டியதை வலியுறுத்துகிறது இந்த நிகழ்வு. இந்நிகழ்ச்சி துணை முதல்வர் சி.என். அசுவத் நாராயணன் நாடாளுமன்ற உறுப்பினர் நிறுவனங்கள்.சி. மோகன் சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கறிஞர் கே.பாலு. செயலாளர் ச.வாசு, பொருளாளர் வ.மணிவணணன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார் இவ்விழாவில் ஆயிரக்கணக்கனோர் கலந்துக்கொண்டனர்.

"கர்நாடக வன்னியர்கள் என்போர் யார்?"

இன்று கர்நாடக வன்னியகுல சத்திரிய சங்க விழாவில் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். இந்த தருணத்தில், கர்நாட்க வன்னியர்கள் யார் என்கிற பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும்.

"கர்நாடக வன்னியர்கள்"

கர்நாடக மாநிலத்தில் வன்னியர்கள் 'திகளர்' என்று அழைக்கப்படுகின்றனர். அக்னிகுல சத்திரியர்கள், சம்புகுல சத்திரியர்கள், வன்னிய குல சத்திரியர்கள் என வேறுபட்ட பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் தமிழ் கலந்த கன்னடம் மற்றும் கன்னட மொழிபேசும் மக்களாக அங்கு வாழ்கின்றனர். கர்நாடக அரசு வன்னிய சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது. (கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 லட்சம் பேர் வரை வன்னியர்கள் வாழக்கூடும் எனக் கருதப்படுகிறது).

கர்நாடக மாநிலத்தில் வாழும் கணிசமான வன்னியர்கள் அம்மாநிலத்திலேயே நெடுங்காலமாக வாழ்கின்றனர். இவர்கள் மூன்று வெவ்வேறு தருணங்களில் பெங்களூருக்கு சென்றவர்கள் ஆகும்.

முதலாவதாக சென்றவர்கள் - பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் போர்கள் மற்றும் சோழர் ஆட்சியின் கீழ் அப்பகுதியில் குடியேறினர். இரண்டாவதாக சென்றவர்கள் - விஜயநகரப் பேரரசின் தமிழக ஊடுருவலுக்கு பின்னர், படைகளில் இடம்பெறாத காரணத்தினாலும் வறட்சியின் காரணமாகவும் சென்றனர். மூன்றாவதாக சென்றவர்கள் ஹைதர் அலி - திப்பு சுல்தான் படைகளில் போர் வீரர்களாக சென்றவர்கள் ஆகும்.

ஹைதர் அலி ஆர்க்காட்டின் மீது படையெடுத்த போது, பகலில் எங்குமே எதிரிப்படையினர் இல்லாத நிலையிலும், இரவுகளில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏன் இவ்வாறு நடக்கிறது என ஆராய்ந்த போது - பகலில் விவசாயிகளாக இருந்த வன்னியர்கள் இரவில் போராளிகளாக மாறி தாக்குதல் நடத்துவதைக் கண்டு அவர்களையும் தனது படையில் சேர்த்துக்கொண்டார். 

பெங்களூரை நகரை நிர்மானித்த கெம்பே கௌடா - காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட வன்னிய குல சத்திரியர் என்று கருதப்படுகிறது (இவர் விஜயநகர ஆட்சியில் அங்கு சென்றிருக்கலாம்). அவர் முதன்முதல் உருவாக்கிய கோட்டை பகுதியில் இப்போதும் வன்னியர்களே அதிக அளவில் வசிக்கின்றனர். அப்பகுதி திகளர் பேட்டை என்றே அழைக்கப்படுகிறது.

(தமிழ்நாட்டின் வன்னியர்களின் தீக்குலம் என்பதே திகளர் ஆகும். சமுதாய அடிப்படையில் தம்மை வன்னியர்களாக அடையாளப் படுத்திக்கொள்ளும் இவர்கள், மொழிசார்ந்த இனத்தால் கன்னடர்கள் ஆகும். )

"பெங்களூர் கரகா திருவிழா"

பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான்.

என்பது, பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் 'திரௌபதி ஆலயத்தில்' சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. அதனைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரளுகிறார்கள்.

'ஆண்டில் ஒருமுறை உங்கள் முன் தோன்றுவேன்' என திரௌபதி வன்னியர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, திரௌபதி அம்மன் கரகத்தில் எழுந்தருளுகிறார் என்பது இதன் ஐதீகம் ஆகும். கடுமையான விரதம் இருந்து இந்த கரகத்தை தூக்கும் கடமையை மூன்று வன்னியக் குடும்பத்தினர் பரம்பரையாக மேற்கொள்கின்றனர். இந்தக் கரகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரக் குமாரர்களாக ஒவ்வொரு வன்னியக் குடும்பத்தில் இருந்தும் ஒருவர் வீதம், வீரக்குமாரர்கள் விரவாளுடன் பங்கேற்கின்றனர்.

(இத்திருவிழாவில் வீரக் குமாரர்களாக வன்னியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு வன்னியர் குடும்பத்தினரும் வீரக் குமாரர்களின் வீரவாளினை தமது குடும்ப பாரம்பரியமாக கொண்டுள்ளனர். நூறாண்டுக்கு முன்னரே ஆங்கிலேயேர்கள் இந்த வாளுக்கு ஆயுதத் தடைச்சட்டத்திலிருந்து விலக்களித்துள்ளனர்)

"வன்னியர் என்பதே ஒரு தனி பேரினம்"

மனிதர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாளங்களை கொண்டுள்ளனர். பேசும் மொழி, வாழும் நாடு ஆகிய அடிப்படைகளில் அடையாளம் காணப்படுவது போலவே, தமது பாரம்பரிய இனக்குழு வழியிலும் மனிதர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், வன்னியர் சமூதாயம் என்பது ஒரு மிகப்பெரிய பேரினம் ஆகும்.

ஒரு தனி தேசிய இனத்துக்கான எல்லா தகுதிகளும் வன்னியர் என்கிற அடையாளத்துக்கு உள்ளது. அனைத்து வன்னியர்களையும் ஒரு புள்ளியில் இணைப்பது, வன்னியர்கள் நெருப்பில் இருந்து தோன்றியவர்கள் என்கிற 'அக்னிவம்ச' தொன்மக்கதை ஆகும். இதன் அடையாளமாக, நெருப்பில் இருந்து தோன்றும் வீரவன்னிய மகாராஜனையும் நெருப்பில் இருந்து தோன்றும் திரௌபதி அம்மனையும் வன்னியர்கள் தம்முடைய அடையாளமாகக் கொள்கின்றனர்.

(உண்மையில், இராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள் - அக்னி வம்சம் என்கிற நம்பிக்கையை தமிழ்நாட்டின் வன்னியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கலாம். அக்னி வம்சத்தை சேர்ந்தவர்கள் நம்பிக்கையை முகலாயர்களுக்கு எதிரான போருக்கான ஊக்கமாக அவர்கள் கொண்டார்கள் என Alf Hiltebeitel எனும் ஆய்வாளர் கூறுகிறார்).

வன்னியர்கள் பெருமளவில் தமிழர்கள். ஆனால் கர்னாடக மாநிலத்தின் கன்னட மொழி பேசும் திகளர்களும், ஆந்திராவில் தெலுங்கு மொழி பேசும் அக்னி குல சத்திரியர் மற்றும் பள்ளி பிரிவினரும் வன்னியர்கள் தான்.

வன்னியர்கள் பெருமளவில் இந்துக்கள். ஆனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் கிறிஸ்தவ வன்னியர்களும் வன்னியப் பேரினத்தின் ஒரு அங்கம் தான்.

உண்மையில், உலகிலேயே மிகவும் வலிமை வாய்ந்த இனமாக கருதப்படும் 'யூதர்களை விட' மக்கள் தொகை அடிப்படையில் வன்னியர்கள் பெரிய இனம் ஆகும். உலகில் உள்ள ஒட்டுமொத்த யூத இன மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சம் பேர். உலகில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages