பாசத்தின் பொருள் அவன் தான்! மருத்துவர் இராமதாசு அய்யா! - Agnipuratchi

பாசத்தின் பொருள் அவன் தான்! மருத்துவர் இராமதாசு அய்யா!

Share This

என் அகராதியில் பாசம் என்ற
இடத்தில் அவன் பெயர் தான்!
விசுவாசம் என்பதற்கு வீழாத
எடுத்துக்காட்டு அவன் தான்!!

நான் சார்ந்த விஷயங்களில்...
உண்மை அவன் உடன்பிறவா சகோதரன்!
நேர்மையின் நிழலும் அவன் தான்....
வீரத்தின் விளைநிலமும் அவனே தான்!!

அவனுக்கு நான் ஒருபோதும் எந்த
உத்தரவும் பிறப்பித்ததே கிடையாது!
என் உணர்வை அறிந்து உடனடியாக
செய்து முடிப்பான் எந்த செயலையும்!!

அவன் ஒரு வியாழன்..... அவன் என்னை
சுற்றி வருவதாலேயே நான் சூரியன் ஆனேன்!
அவன் மீது அன்பு காட்டி, அரவணைத்ததாலேயே
அவனுக்கு நான் தாயும், தந்தையுமானேன்!!

இவற்றையெல்லாம் நினைக்கையில்
நெஞ்சமெல்லாம் இனிக்கிறது!
அவனை நேரில் பார்க்க தேடுகிறேன்...
காணவில்லை.... மாவீரா.... எங்கே போனாய்?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages