அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*இந்தியாவில் இதுவரை 3 இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர்; பாகிஸ்தானில் ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ ஜனாதிபதி ஆகியிருக்கிறார்களா?.
- ஹெச்.ராஜா.
*மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி:
மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் இணை நிறுவனருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார்.
அவருடன் உத்தரபிரதேச ஆளுநர் அனந்தி பென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன. மோப்பநாய்கள், டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
*டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஆலோசனை:
ஆலோசனையில் தலைமை தளபதி பிபின் ராவத், அஜித் தோவல், சிஆர்பிஎஃப் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
*ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழப்பு - 45 தீவிரவாதிகள் காயம்.
*தந்தை பெரியார் குறித்த பாஜகவின்; ட்விட்டர் பதிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.
*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வரும் 26-ம் தேதி புதுச்சேரியில் பேரணி - முதலமைச்சர் நாராயணசாமி.
*உத்திரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை சந்திக்க சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தம்.
*தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை.
- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
*குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:
குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இஸ்லாமியர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
*குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசிக்க வரும் 29ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு.
*குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக சென்னையில் இண்டர்நெட் மையங்களில் போலீசார் சோதனை:
*30 பேரின் ஐ.பி முகவரிகளைக் கொண்டு பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை; இண்டர்நெட் மையங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை எனவும் தகவல்.
*ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு டிசம்பர் 27,30ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து அரசாணை.
*தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்.ஆர்.சிக்கும், என்.பி.ஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெளிவாகக் கூறுகிறேன்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷா.
*மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.84 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
*உலக வரலாற்றில் ஜெர்மனி நமக்கு ஒரு இருண்ட அத்தியாயத்தை நினைவூட்டுகிறது:
ஜெர்மனி நினைவூட்டும் இருண்ட அத்தியாயத்தை இந்தியாவில் மீண்டும் செய்யாதீர்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மனி மாணவர் நமது நன்றிக்கு உரியவர்.
- ப.சிதம்பரம் ட்வீட்.
*பள்ளித்தேர்வு வினாத்தாள்கள் இனிமேல் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும்.*
*வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
- அமைச்சர் செங்கோட்டையன்.
No comments:
Post a Comment