செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் அறிவுரை - Agnipuratchi

செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் அறிவுரை

Share This

செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் அறிவுரை

தூங்கும் நேரத்தை தவிர கிட்டத்தட்ட நாள் முழுவதும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். அப்படி செல்போன்களுக்கு அடிமையானவர்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கி உள்ளார். உங்கள் செல்போன்களை தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என அவர் கூறினார். ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள்காட்டி ‘‘அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள்’’ அதையே நீங்களும் செய்யுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும். பெற்றோரே, குழந்தைகளே, சகோதர, சகோதரிகளே இந்த புனிதமான பணியை இன்றே நாம் தொடங்குவோம்’’ என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages