அக்னிப்புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள்.
*ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் திரெளபதி முர்மு
*ஜார்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
*மக்களின் தேவைக்காகதான் ஆளுநர் அலுவலகம் செயல்படுகிறது, கருத்துகளை கண்ணியமாக கூறவும் - துணை நிலைஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வருக்கு கடிதம்.
*உத்தர பிரதேசத்தில் கைதான முன்னாள் போலீஸ் அதிகாரியை சந்திக்க சென்ற தன்னை போலீசார் தாக்கியதாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்
*கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்த சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். இந்நிலையில், உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
*தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து உள்ளனர்.
தமிழக மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர்
No comments:
Post a Comment