ஜார்க்கண்ட் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
அம்மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை பதவியேற்கிறார்.
81 இடங்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை அடங்கிய கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது புதிய மைல்கல் என்றும், புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை முதலமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2013 - 2014 இடையிலான காலகட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் இவர் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
ஜார்கண்ட் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு 26 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் தோல்வியைத் தழுவிய முதலமைச்சர் ரகுபர்தாஸ் ஆளுநர் டிரவுபதி முர்முவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.
No comments:
Post a Comment