அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யமும் மனு.

*கேரளா : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம்.

*டெல்லியில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல். வன்முறை தொடர்ந்தால் வழக்கை விசாரிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.

*திமுக சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தில் பாஜகவின் குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் - திமுக தலைவர்.  ஸ்டாலின்.

இலங்கையில் பவுத்த மதவாதிகளால் தமிழ் இந்துக்களும், இஸ்லாமியர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் ஈழ தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் கடமையை செய்ய திமுக எப்போதும் தயங்காது கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கு அவசர தேவை என்ன? - ஸ்டாலின்.

*ஜார்க்கண்ட் பிரசாரத்தில் 'ரேப் இன் இந்தியா' என ராகுல்காந்தி பேசியது குறித்து மாநில தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரியது தலைமை தேர்தல் ஆணையம்.

*உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை அமைத்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

*தஞ்சை : சம்பா பயிர்களில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு.

*ஜார்க்கண்ட் பிரசாரத்தில் 'ரேப் இன் இந்தியா' என ராகுல்காந்தி பேசியது குறித்து மாநில தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரியது தலைமை தேர்தல் ஆணையம்.

*டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிருப்தி:

போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது; முதலில் அங்கு அமைதி நிலவட்டும். யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது.
- உச்சநீதிமன்றம்

*உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை அமைத்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீது வரும் 18-ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்.

*தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக செயல்படுகிறது.- தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

*சிலை கடத்தல் வழக்கில் எஞ்சியுள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம்.

பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவு.சிலைகள் தொடர்பான 50 தொன்மை சான்றுகள் ஒப்படைக்கப்படவில்லை - தமிழக அரசு புகார்.

*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீது வரும் 18-ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்.

*குடியுரிமை சட்டத்திற்கு எதிராக லக்னோவில் மாணவர்கள் போராட்டம்:
காவல்துறையினர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பர‌பரப்பு.

*டெல்லி மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக்கோரி மதுரை, கோவையில் மாணவர்கள் போராட்டம்- போராட்டத்தில் தள்ளுமுள்ளு; மாணவர்கள் கைது!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages