அக்னிப்புரட்சியின் மாலை செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சியின் மாலை செய்திகள்

Share This

அக்னிப்புரட்சியின் மாலை செய்திகள்

*ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு.உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கியது  மாநில தேர்தல் ஆணையம்.

*அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும், வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம். அனில் பைஜால்: வன்முறை சட்டவிரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றது - டெல்லி ஆளுநர்.

*போராட்டத்தின் போது ரயில் உள்ளிட்ட பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரை துப்பாக்கியால் சுடுங்கள்- மாவட்ட நிர்வாகங்கள், ரயில்வே அதிகரிகளுக்கு ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி அறிவுறுத்தல்.

*மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே பொது பாதையை ஆக்கிரமித்து, தனியார் மதுபான விடுதிக்கு பாதையாக பயன்படுத்தி வரும் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம். மாணவர்கள் போராட்டத்தால்; சென்னை பல்கலைகழகத்தில் போலீஸ் குவிப்பு.

*டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறுசீராய்வு மனுவை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும்

* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு தூக்கு தண்டனை

தேசதுரோக வழக்கில் பாகிஸ்தான் பெஷாவர் நீதிமன்றம் உத்தரவு
2007ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தற்போது துபாயில் தங்கி இருக்கிறார் முஷாரப் உடல்நிலை மோசமடைந்ததால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் முஷாரப்

* அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு

தற்போதைய பல்கலை கழகம், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும்"
புதிதாக மற்றொரு பல்கலை கழகத்தை தொடங்க தமிழக அரசு திட்டம்
சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியீடு
அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும்.

* மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களை நடத்த தேர்தல் தேதி எதுவும் குறிக்கப்பட்டுள்ளதா? - மாநில தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி.

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அடுத்தகட்டமாக தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு, தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages