திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. - Agnipuratchi

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Share This
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீப திருவிழா கொடியேற்ற ஹஜ்த்துன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து , அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன, திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages