அக்னிப்புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள்

*தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிப்பு.
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு.

*நாகை: பூம்புகாருக்கு சுற்றுலா வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த குபேரன்(20) என்ற மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு.

*மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்- முதல்வர் மம்தா பானர்ஜி.

*அசாம் மாநிலத்தில் மேலும் 2 நாட்களுக்கு செல்போன் மற்றும் இணையதள சேவை முடக்கம்.
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நீடிக்கும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் நடவடிக்கை.

*இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

*இன்று முதல் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது மத்திய சாலை போக்குவரத்துத் துறை. மேலும் ஜனவரி 15ம் தேதி ஃபாஸ்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழக மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்டதாகவும், வலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல - இலங்கை கடற்படை விளக்கம்:

தமிழக மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் இலங்கையின் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் போதை பொருட்கள் எளிதாக கொண்டு வரப்படுகிறது - இலங்கை கடற்படை.

*தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 19ஆம் தேதி டெல்லி பயணம்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்க முடிவு என தகவல்.

*உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு தொடுக்கும் திமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை, பரிதாப உணர்வுதான் வருகிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க ஆணை.
மாணவர்களிடம் Bonafied Certificate பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages