அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

மச்சஅக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை ஒன்றியம் 21வது வார்டில் உள்ள 9 வாக்குபதிவு மையங்களுக்கும் வரும் 30 தேதி மறு வாக்குபதிவு நடைபெறும் என அறிவிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர்.

*கொடைக்கான‌ல் : க‌வுஞ்சி கிராம‌த்தில் 7,8,9 வார்டுகள் ம‌றுவ‌ரையில் குள‌றுபடி ந‌ட‌ந்துள்ள‌தாக‌ வீடுகளில் க‌ருப்பு கொடி  ஏற்றி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்ட‌ம்.

*வீட்டில் டி.வி. இல்லாத மாணவர்கள் பள்ளிகளில் வந்து பிரதமர் உரையை பார்க்கலாம்: இது கட்டாயமல்ல - முதல்வர் பழனிசாமி ட்வீட்.

*”வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!” - முதல்வர் பழனிசாமி.

*பிரதமர் ஆற்றும் உரையை கேட்பதற்காக வரும் 16-ம் தேதி மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் ஆர்ப்பாட்டம்.

திமுக மாணவரணி சார்பில் பள்ளி கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - ஸ்டாலின்.

*2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றார் மேரி கோம்.

*51 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஸரீனை தோற்கடித்ததன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

*தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து.

*வாக்கு எண்ணிக்கையை வீடியோ எடுத்து மையத்துக்கு வெளியில் உள்ள மக்களுக்கு ஒளிபரப்ப வேண்டும் என கோரி கடலூர் கள்ளிப்பட்டு ஊராட்சி தலைவர் வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

*திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் கட்சியிலிருந்து நீக்கம் - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி.

*புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை காவல்துறை உத்தரவு.

*நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை - சென்னை காவல்துறை.

*மருத்துவர் இராமதாசு ஐயா
Twitter பதிவு
1.  தருமபுரம் ஆதீன கல்லூரி மாணவிகள் 4 பேர் மது அருந்திய காணொலி வெளியானதும், அதற்காக அவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் வருங்காலத் தூண்களை மது எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம்  தேவையில்லை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages