அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
*வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் - முதலமைச்சர்.
*குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
*டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக 34-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதம்.
*ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதேனும் பிரச்சினை எனில் 1512 என்ற எண்ணில் இருப்புபாதை காவல் நிலையங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் - திருச்சி ரயில்வே காவல் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.
*வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என கவனித்து, அத்துமீறல்களையும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டும் - தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
*அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது - வானிலை ஆய்வு மையம்.
*வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக முகவர்கள் கவனமுடன், விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்:
சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி, அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் - ஓபிஎஸ், ஈபிஎஸ்.
*"அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது":
அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு கோரி வழக்கு. தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசு ஊழியர் நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு மனுவில் கோரிக்கை.
*என் மகள் தற்கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை சிபிஐ அதிகாரிகள் நிச்சயம் பிடிப்பார்கள் என நம்புகிறேன் - சென்னை சிபிஐ அலுவலகத்தில் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி.
*ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும்.
காலக்கெடுவுக்கு நாங்கள் அடிமையாக விரும்பவில்லை; ஏர் இந்தியாவை தனியாராக்க தீவிரமாக முயற்சிக்கிறோம் - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.
*"குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, சம உரிமையை பறிக்கும் செயல்".
- கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!
*2024-25ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும். ரூ.102 கோடிக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
*திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமறைவு - காவல்துறை.
தலைமறைவாகி உள்ள 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அறிவிப்பு. தலைமறைவானவர்கள் குறித்து 4981 00079, 044-23452377, 94981 81238 என்ற எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம் - காவல்துறை.
*கடலூர், தூத்துக்குடி, நாகை, தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையம்.
கடலூரில் விலங்கல்பட்டு ஊராட்சியில் 242வது வாக்குச்சாவடி, தூத்துக்குடி நாலுமாவடியில் 67, 68, 69, 70, 71வது வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.
நாகை தாணிக்கோட்டகத்தில் 119வது வாக்குச்சாவடி, தேனி உப்புக்கோட்டையில் 52வது வாக்குச்சாவடி, மதுரை வஞ்சிநகரத்தில் 91வது வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.
*ஜனவரி 6ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
6ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் கூட்டம்.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்-சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி அழைப்பு.
*அனுமதியில்லாத கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. கட்டடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு- தமிழக அரசு.
*ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என முறையீடு.
இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
No comments:
Post a Comment