📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 13 திங்கள் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சுகம் - நலம்
➖➖➖➖➖➖➖➖➖➖
குடியுரிமை திருத்த சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளன. இதனை மம்தா-மாயாவதி புறக்கணித்து உள்ளனர்.
அலங்காநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசினர் பெண்கள் பள்ளியில் காளைகளுக்கான பதிவு இன்று தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் காளைகளின் உடற் தகுதியை ஆய்வு செய்தனர்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக திகார் சிறையில் ஒத்திகை பார்க்கப்பட்டது.
முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படும் பென்னிகுக் பிறந்த நாள்
பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு
உங்களால் எதையும் செய்ய முடியும் என நம்புங்கள் - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
CAA தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதி புறக்கணிப்பதாக அறிவிப்பு
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். இந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் அவர் மீண்டும் உறுதி அளித்து இருக்கிறார்.
சென்னை விமான நிலையம் அருகே போகியன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காதீர்கள் : மக்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்
“சப்-இன்ஸ்பெக்டர் மரணத்திலும் அரசியல் செய்கிறார்” மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
NRC, NPR பலரின் குடியுரிமையை பறிக்கும்; CAA தொடர்பாக மக்களின் கருத்தை பிரதமர் கேட்க வேண்டும்...ப.சிதம்பரம் பேட்டி
கூட்டணி வியூகம் குறித்து அ.தி.மு.க. தலைமை முடிவு எடுக்கும் என்றும், தனிப்பட்ட கருத்துகளை கட்சியினர் பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்து 41,858 புள்ளிகளில் வர்த்தகம்
இலங்கை பிரதமர் ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருகை
வரட்டாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அமீரகம்
மாவட்டத்தில் கடும் உறைபனி பொழிவு: கருகி வரும் தேயிலை செடிகள்: விவசாயிகள் வேதனை
ஈரானில் போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது
திருப்பூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி
துருக்கியில் கோர விபத்து: படகு மூழ்கி, 11 அகதிகள் சாவு
தென்காசியில் 556 பயனாளிகளுக்கு ரூ.10.42 லட்சம் மதிப்பிலான விலையில்லா கோழிகள் விநியோகம்
இந்து என்று உச்சரித்தாலே சிலருக்கு ‘அலர்ஜி’ சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
பிளாஸ்டிக் பொருட்கள், டயர் டியூப் போன்றவற்றை எரித்தால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
புளிய மரத்தில் கார் மோதி விபத்து: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், டிரைவர் பலி
சென்னை புறநகர் இரயில் நிலையத்தில் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து 90 சவரன் நகை மீட்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்
தமிழக ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நலவாரியம் குழு அமைப்பு
தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
கடலூரில் விடிய விடிய கருவாட்டுச் சந்தை: ஒரே இரவில் ரூ.1கோடி வரை விற்பனை
குருவிகுளம் அருகே, விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னை: உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 100 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அவற்றை மூட பரிந்துரை செய்யும் நடவடிக்கைகளை, அண்ணா பல்கலைக் கழகம் மேற்கொண்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 1,603 பேர் எழுதினர்
புதுடில்லி : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவத்தில், மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, தமிழகத்தில் அதிக அளவில் புகார்கள் பதிவாகி உள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் அதிகாரி ஆய்வு
புதுடில்லி : வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை முழுமையாக விலக்கிக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஸ்ரீகாந்த், பும்ராவுக்கு விருது
சபரிமலை ரயில் பாதை செலவு ரூ.1,566 கோடியாக உயர்வு; கேரள அரசு ஒத்துழைக்கவில்லை என பியுஷ் கோயல் புகார்
வெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா?
ஆமதாபாத்: இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்ட முடியுமா என மேற்குவங்க முதல்வர் மம்தா, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால்விடுத்துள்ளார்.
செல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் - நடிகை நமிதா பிரமோத் வருத்தம்
சென்னை : பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், நாளை(ஜன.,14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொய்சர் ரசாயன ஆலை வெடி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் - முதல்-மந்திரி அறிவிப்பு
புதுடில்லி:நாட்டின் கல்விச் சூழலை இடதுசாரி ஆர்வலர்கள் மோசமாக்கி வருவதாக பிரதமர் மோடிக்கு 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் எழுதிய கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பா.ஜனதா ஆட்சியில் ஊழல் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி - விசாரணைக்கு பயப்படமாட்டோம்
உள்ளடி வேலை பார்த்த கட்சி நிர்வாகிகள் மீது ஸ்டாலின் கோபம்! கட்டிங் வாங்கி காலைவாரியவர்கள் பற்றி கணக்கெடுப்பு
35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தி - நாராயண் ரானே சொல்கிறார்
கோல்கட்டா: மே.வங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை மாநிலமுதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.
தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பு? குண்டலுபேட்டையில் பதுங்கி இருந்த - 2 பயங்கரவாதிகள் கைது
புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு அடுத்து வரும் 7 நாட்களில் 2 மணி நேரம் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனித சமூகத்திற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு உந்துசக்தி - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
புதுடில்லி:சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
பயங்கரவாதிகளின் புகலிடமாக கர்நாடகம் மாற அனுமதிக்க மாட்டோம் - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
புதுடில்லி : டில்லி ஜே.என்.யு., வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்களில் முகமூடி அணிந்து வந்த பெண், பல்கலை., மாணவி என டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கபாலிபெட்டாவில் இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு: கனகபுராவில் அமைதியை சீர்குலைக்க முயற்சி - பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
சென்னை : பொங்கலை முன்னிட்டு, சென்னையில் இருந்து இதுவரை 4,53,292 பேர் சிறப்பு பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் மொழியில் பேசும் காங்கிரஸ் - மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி குற்றச்சாட்டு
கோவையில் கல்லுாரி மாணவர்களை குறி வைத்து, கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது.
முத்தியால்பேட்டையில் பயங்கரம் வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயம்
கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின், 31வது பட்டமளிப்பு விழா, திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நேற்று நடந்தது.அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு
மதுரை மாவட்டத்தில் இரு நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க ஆர்வத்துடன் விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர். இம்முகாம்களை தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., ஆய்வு செய்தார்.
53 வகையான பறவைகள் ஊசுடு ஏரிக்கு வருகை கணக்கெடுப்பில் தகவல்
சென்னை புத்தக கண்காட்சியில் பேச்சாளர்கள் பட்டியலில் மறைந்த எழுத்தாளர்கள் சிலரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது பலரையும், அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தி உள்ளது.
காரைக்காலில் மீன் எண்ணெய்-பவுடருக்காக ஒரே நாளில் 48 ஆயிரம் கிலோ கழிவு மீன்கள் ஏற்றுமதி
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.76 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.98 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment