📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 14 செவ்வாய் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சுலபம் - எளிது
➖➖➖➖➖➖➖➖➖➖
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததா? என்பதை கண்டறிய, சென்னையில் நேற்று ஒரே நாளில் 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவர்களுடைய திறமையை பரிசோதிக்க தகுதித்தேர்வும் நடத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட போட்டி போட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள்....: 6 லட்சம் பேர் பயணம்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை; எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறுவதில் 931 நிறுவனங்கள் மோசடி....:மத்திய நிதியமைச்சகம் தகவல்
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை ரத்து
ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் - தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு
பெங்களூருவின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் : ஆய்வில் தகவல்
ஓட்டு வங்கி அரசியலால் நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு: மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ஹாசன்-சிக்ஜரூர் இடையேயான 160 கி.மீ தூர அகல ரயில்பாதையை அஜய்குமார் சிங் ஆய்வு செய்தார்
கூடுதல் வரியாக வசூலான ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு பயன்படுத்தவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர்கள் விளக்க வேண்டும் குடியுரிமை திருத்த சட்டத்தால் என்ன பாதிப்பு : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேச்சு
பொருளாதார தடை: “ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை” - டிரம்ப் சொல்கிறார்
கவுரிலங்கேஷ் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ரிஷிகேசை 15 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி : நீதிமன்றம் உத்தரவு
21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா: அமெரிக்க செனட்டில் தாக்கல்
தென் மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: இதுவரை 10 தீவிரவாதிகள் கைது: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை
பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கம்
கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி
பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்வு
பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு,..அறைக்கதவை திறக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள்: ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற தலைவர், து.தலைவர் தம்பதி
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை நாளை முதல் முழு அளவில் அமல்
கலெக்டரிடம் பெற்றோர் மனு மகள் தற்கொலைக்கு காரணமான டிக்-டாக் செயலிக்கு தடை
டெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை; தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
திருச்சி தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்கள் கழுத்தை அறுத்துக் கொலை - தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு
உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: பஸ் மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
பெசன்ட்நகரில் நடந்த சந்தையில் மறு பயன்பாடு பொருட்கள் 22 ஆயிரத்திற்கு விற்பனை
திருமணம் செய்து வைக்க கூறியதால் மகனை அடித்துக்கொன்ற விவசாயி - தர்மபுரியில் பரபரப்பு
தற்போதைய செய்திகள்
தனியாா் பேருந்து கட்டணத்தை விஞ்சும் சுவிதா ரயில் கட்டணம்: சென்னை-நெல்லைக்கு மூன்று அடுக்கு ஏசி கட்டணம் ரூ.3,850.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னையில் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பயணிகள் கடும் அதிருப்தி
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: மும்பையில் இன்று நடக்கிறது
ரெய்சினா மாநாடு தில்லியில் இன்று தொடக்கம்: பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் விளையாடுவதற்காக பேட்டிங் வரிசையில் பின்னால் இறங்க தயார் - கேப்டன் விராட்கோலி
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஜன. 21 வரை நியாயவிலை கடைகளில் பெறலாம்
முருகதாஸ் மீது நயன்தாரா கடும் கோபம்
கேபிள் டிவியில் ஒளிபரப்பாகும் தர்பார் படம்: நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் கோரிக்கை!
யுவன் சங்கர் ராஜா இயக்குகிறார்; இளையராஜா வாழ்க்கை படமாகிறது
ஸ்ரீரங்கம் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறிவையாளி கண்டருளிய நம்பெருமாள்
பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி
திருப்பதி: உண்டியல் காணிக்கை ரூ. 2.53 கோடி
‘இன்றைய சிவாஜி நரேந்திர மோடி’ பா.ஜனதா வெளியிட்ட புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு
இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது? -பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைபிடிக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
ரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு
மத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை
2.50 லட்சம் மலர் நாற்றுகள்: சிம்ஸ் பூங்காவில் நடவு
வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் ; முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டம்
சென்னை : சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுத்த மாநிலங்களில், முதன்மையான மாநிலமாக தமிழகம் தேர்வாகி உள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று பெற்றார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்துக்கு முயற்சி; முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது
துபாய்: துபாயில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திற்கு துரோகம் செய்யும் எடியூரப்பா; சித்தராமையா குற்றச்சாட்டு
போபால்: பிரபல சர்ச்சை பெண் சாமியாரும் மத்திய பிரதேச மாநிலம் போபால் லோக்சபா பா.ஜ. எம்.பி.யுமான பிரக்யாசிங் தாக்குர். இவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி விமர்சனத்திற்குள்ளனார்.
பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த 17 பேருக்கும் மந்திரி பதவி; எச்.விஸ்வநாத் வலியுறுத்தல்
புதுடில்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
மைசூருவில், அரசு பள்ளியில் வகுப்பறைகளாக மாறிய ரெயில் பெட்டிகள்
புதுடில்லி: புதுடில்லியில் ரெய்ஸினா டயலாக் 2020 என்ற பெயரில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்திர புவி பொருளாதார உச்சி மாநாடு இன்று (ஜன.14) துவங்குகிறது.
ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
சென்னை: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதியை, வரும், 27ல் அறிவிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், ஆளும் கூட்டணியில், இடப்பங்கீடு பேச்சு துவங்கியுள்ளது.
கவர்னருடன் சந்திப்பு: என்னை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - தனவேலு எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
அடையாறு:சென்னை மாநகராட்சி துவங்கிய, மறு பயன்பாடுள்ள பொருட்கள் சந்தைப்படுத்தும், 'ஸ்வாப் ஷாப்' திட்டம், அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வில்லியனூர் அருகே, கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து
சென்னை:இலவச அரிசி வழங்குவதற்கு பதில், பணமாக வழங்கும்படி, கவர்னர் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை, வரும்,24ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை -கடலூர் சாலையில் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.65 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.98 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment