📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 27 திங்கள் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை
➖➖➖➖➖➖➖➖➖➖
டெல்லியில் உள்ள ராஜபாதையில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். இதையொட்டி நடந்த கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.
நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 282 கிராம சபைகளில் தீர்மானம்
இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
விளாத்திகுளம்: குடியரசு தின விழா பள்ளிக்கு வராத ஹெச்.எம். ஆசிரியை சஸ்பெண்ட்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஊராட்சிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் கேள்வி எழுப்பி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: வானொலி உரையில் பிரதமர் மோடி கருத்து
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
குரூப்-4 தேர்வு முறை கேடு வழக்கில் அதிரடி திருப்பமாக டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகள் 50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலை விரித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு: சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது என பாமக தலைவர் ஜிகே மணி கேட்டுக்கொண்டுள்ளார்.
குரூப்-4 முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து குவியும் புகார்கள் - நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் வலியுறுத்தல்
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உறவினர் போலீசிடம் சிக்கினார்
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிப்பு: ராணுவம் அதிரடி
தலைக்குந்தா அருகே முத்தநாடு மந்தில் தோடர் இன மக்களின் பண்டிகை கொண்டாட்டம்
யூனியன் பிரதேசமாக பிரிந்த நிலையில் ஜம்முவில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றிவைப்பு
டெல்டாவுக்கு 150 டிஎம்சி நீர் திறப்பு மேட்டூர் அணை நாளை மூடல்
அமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்
கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை: விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
எழும்பூர் உட்பட 5 ரயில் நிலையங்கள் ரூ109.55 கோடியில் மேம்படுத்தப்படும்: ரயில்வே பொதுமேலாளர் தகவல்
இரட்டை என்ஜின் கொண்டது: உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி
பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
மியான்மரில் பீரங்கி தாக்குதலில் ரோஹிங்கியா பெண்கள் 2 பேர் பலி
பிப்.,8 ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் டெல்லியிஷஷன் முன்னேற்றத்திற்கானது: கைலாஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி
பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்
சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்
குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்
துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு
குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்
சப்-இன்ஸ்பெக்டர் கொலை: காயல்பட்டினத்தை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பா? - பயங்கரவாதியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை
தமிழகத்தில் உரிமைகளுக்காக போராடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி
தென்கொரியாவில் விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்: உண்மையை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
பத்ம விருது பெற்றவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து
மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
டி.வி. நடிகை சேஜல் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
வெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான்: உதயநிதி ‛ரைமிங்'
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மார்ச் 7-ந் தேதி அயோத்தி பயணம் சஞ்சய் ராவத் தகவல்
'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
ரூ.18,600 கோடி மதிப்பீட்டில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அனுமதி - கவர்னர் வஜூபாய் வாலா தகவல்
மும்பை : மஹாராஷ்டிரா மாநிலத்தில், 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும், 'சிவ போஜனம்' திட்டம், குடியரசு தின விழாவை முன்னிட்டு, நேற்று துவங்கி வைக்கப்பட்டது.
இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம்: 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்
அங்காரா : துருக்கியில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதே பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவர, அதிபர் எர்டோகன் அரசு முடிவு செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் மறுபரிசீலனை: மத்திய அரசுக்கு, தேவேகவுடா வலியுறுத்தல்
பீஜிங்:நம் அண்டை நாடான சீனாவில், 'கொரோனா வைரஸ்' பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு நகரங்களுக்கு வேகமாக பரவி வருகிறது.
அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி
கோவை:விபத்து இழப்பீடு வழக்கை விசாரிக்க, இரண்டு புதிய நீதிமன்றங்கள் திறக்க அனுமதி கிடைத்தும், இடம் கிடைக்காமல் நீதித்துறை நிர்வாகம் தவித்து வருகிறது.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க சித்தராமையா வலியுறுத்தல்
மதுரை : சீனாவில் பலரை பலி வாங்கி வரும் 'கொரோனா வைரஸ்' தாக்குதல் குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து: முதல்-அமைச்சர் நாராயணசாமி புறக்கணிப்பு
திருப்பூர்:போலீசாரின் மிடுக்கான அணிவகுப்பு, பள்ளி குழந்தைகளின் 'கலர்புல்' கலை நிகழ்ச்சிகளுடன், குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு
சென்னை : 'பெண் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளில், அவர்களது கணவர் உள்ளிட்ட பிறர் தலையிட்டால், பி.டி.ஓ.,க்களிடம் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஊராட்சி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
உப்பளம் மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றினார்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.56 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.47 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment