📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 28 செவ்வாய் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சுந்தரம் - எழில்
➖➖➖➖➖➖➖➖➖➖
கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு
புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
கோவை:குழந்தைகள் காப்பக ஆய்வின் போது, ஆவணங்களை மட்டுமே சரிபார்ப்பதாகவும், குழந்தைகளை நேரடியாக சந்தித்து பேசுவதில்லை என்றும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
கர்நாடக பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் - முதல் மந்திரி எடியூரப்பா தகவல்
அவிநாசி:அவிநாசி ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகளில் நீர்வளம் மேம்படுத்தும் நோக்கில், கவுசிகா நதி புனரமைப்பு பணி துவங்கியுள்ளது.
குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்னை:'சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக, பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், உள்துறை அதிகாரி ஆஜராக வேண்டியது வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு
இன்ஜி., மாணவர்கள் மூலம் நகரங்களை தகர்க்க அல் - உம்மா சதி
‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து
நடப்பாண்டில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு: ரத்து குறித்து அடுத்த ஆண்டு பரிசீலனை...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
வெளிநாட்டு வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு உத்தரவு
ஸ்மார்ட் சிட்டி ரேங்க் கார்டு ஜூனில் வெளியாகிறது
பாகிஸ்தானில் தொடரும் அவலம்: இந்து பெண்ணை கடத்தி கட்டாய மத மாற்றம்
காஷ்மீர் பண்டிட்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் பேச்சு
அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்
ஈரானில் பரபரப்பு: ஓடுபாதையில் இருந்து விலகி நெடுஞ்சாலைக்கு வந்த விமானம்
ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் எண்ணெய் குழாய் திட்டம் எதிர்த்து கிராம சபைகளில் தீர்மானம்
குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை: மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி புகார் - பிரியங்காவும் உடன் சென்றார்.
13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு
கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா கொலை குற்றவாளியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அலையாத்தி காடுகளை அழித்து மேம்பாலம் கட்டும் பணி... எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்
திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை
பரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
கோவையில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறுமா? - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்
10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம் கிடைக்கும் மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள் ‘சிவ்போஜன்’ என்ற பெயரில் தொடக்கம்
பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கு: மத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் அஜித்பவார் காட்டம்
ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் மூச்சு திணறி பெண் உயிரிழப்பு
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்
பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போர்க்கொடி
அமராவதி :ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், செயல்பாட்டில் உள்ள மேல்சபை கலைக்கப்படும் என, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி உள்பட 11 பேருக்கு பதவி கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம் இடைத்தேர்தலில் தோற்றவர்களுக்கு வாய்ப்பில்லை
சென்னை : நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், ஆணைய அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
கர்நாடக பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்
புதுடில்லி: நகர கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்கப்பட்டிருந்தது.
காலியாக உள்ள ஒரு இடத்திற்கான கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல் வருகிற 17-ந் தேதி நடக்கிறது தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: 'பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கண்காணிப்பு கேமராக்களில் சுவிங்கம் ஒட்டி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது
புதுடில்லி: காவிரி டெல்டா பகுதியில், 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி, காவிரி விவசாயிகள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை மங்களூரு பொதுக்கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
புதுடில்லி: 'மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சே இல்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசு தினவிழாவில் விதிமுறை மீறல்: கவர்னர் கிரண்பெடி மன்னிப்பு கேட்கவேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
கோல்கட்டா : மேற்கு வங்க கவர்னர் மேற்கொண்ட சமாதான முயற்சிகளை, முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கவில்லை.
பத்ம விருது பெற்றவர்களை அவமதிப்பதா? - கவர்னர் கிரண்பெடி வேதனை
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 31 முதல் நடக்கும், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில், 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
12-ந்தேதி புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
இலங்கையில், ஒரு மருத்துவமனையில் தாடி, மீசையுடன் வந்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.44 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.33 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment