உயிரிழந்த மணிவேல் பெரம்பலூர் மாவட்டத்தில், பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயது முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே ஆதனூர் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றவர் 72 வயதான மணிவேல். இவர் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்டு 962 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 166 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சளி, இருமலால் கடந்த இரண்டு நாட்களாக மணிவேல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (ஜன.3) அதிகாலை 5 மணி அளவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இவரது குடும்பத்தினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற்ற மறுநாளே இறந்த இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Home
அண்மை செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில், பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயது மணிவேல் முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயது மணிவேல் முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment