அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*முரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன், திராவிட இயக்கத் தமிழன், மனிதன் என பொருள் - முரசொலி பதில்.
முரசொலி வைத்திருந்தால் சாதி, மத பேதம் பார்க்காதவன், ஆண்டான்-அடிமைக்கு எதிரானவன் என பொருள் - ரஜினிக்கு முரசொலி நாளிதழ் பதிலடி.
*திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ளது குடும்ப பிரச்னையே. இதனால் கூட்டணி உடையும் என எதிர்பார்க்காதீர்கள் - முத்தரசன்.
*நிர்பயா குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டாமல் பிப்ரவரி. 1ம் தேதி அவர்களை தூக்கிலிட வேண்டும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி.
*2 ஆண்டுகளுக்கு பிறகு களத்திற்கு திரும்பி, முதல் தொடரிலேயே பட்டம் வென்ற சானியா மிர்சா
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
*மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை விட நியமனம் செய்யப்பட்ட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் இல்லை.
ஆளுநர் ஆஃரிப் கான் சும்மா இருக்கும் நேரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை தெளிவாக படித்து புரிந்து கொள்ளட்டும் - பிணராயி விஜயன்.
*அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
*திமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசியுள்ளோம்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.
*2017 - 18ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டியில், ரூ.4073 கோடி மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.
தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்தான், பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.
*”திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த கருத்துகளை பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்"- மு.க.ஸ்டாலின்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொதுவெளியில் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் அறிக்கை.
*சென்னை குடியரசு தினத்திற்கான ஒத்திகை நடைபெறுவதையொட்டி வரும் 20,22,23 மற்றும் குடியரசு நாளான 26 ஆகிய தேதிகளில் சந்தோம் சர்ச்-போர் நினைவுச்சின்னம் வழிகளில் போக்குவரத்து மாற்றம்.
*ஸ்டாலினுக்கு, அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகாது, அது மதுரை என்றாலும் சரி, கடலூர் என்றாலும் சரி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்.
No comments:
Post a Comment