அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிப்பு.
*”தன்னலமற்று உழைத்தால் என்னைப் போல் உயரலாம்”.- முதல்வர் பழனிசாமி.
என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்ற பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் - முதல்வர் பழனிசாமி.
*நெல்லை : முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 22-ம் தேதி முதல் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்.
6 நாட்களுக்கு மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து ஐய்யனார் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல தடை.
*டெல்லியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவுவதைத் தடுக்க 8 தீயணைப்பு வாகனங்களில் இருந்து நீரைப் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
*குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம்:
முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய திட்டம். காவல் துறையில் புகார் அளிக்கவும் டிஎன்பிஎஸ்சி முடிவு.
*பா.ஜ.க. தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜே.பி.நட்டா.
2019ஆம் ஆண்டு ஜூன் 17-இல் பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.புதிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
*ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு.
தலைநகரை 3 இடங்களில் நடத்தும் ஜெகன் மோகன் ரெட்டி முடிவுக்கும் எதிர்ப்பு-மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி போராட்டம்.தெலுங்கு தேசம் கட்சி போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம்.
*நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தூக்கு தண்டனையை எதிர்த்து பவன்குமார் குப்தா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு.
குற்றம் நடந்த போது தான் சிறுவனாக இருந்ததை பரிசீலிக்கவில்லை என கூறி பவன்குமார் குப்தா மனு.
பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
*தெற்கு தீபகற்ப கடலோர பாதுகாப்பில் தஞ்சை தளம் முக்கியமானது என்பதால் சுகோய் போர் விமானம் சேர்ப்பு.
தஞ்சையில் சுகோய் போர்விமான படைப்பிரிவை அமைப்பதன் மூலம் இந்திய கடற்படை மற்றும் ராணுவத்திற்கு நெருக்கமான ஆதரவை விமானப்படை வழங்க முடியும்- பிபின் ராவத்.
*வருமானவரி விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு.
சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்கு நாளை ஆஜராக உத்தரவிட்ட நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் அவசர முறையீடு.
*வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவித்தால் தான் தேர்தல் வழக்கு தொடர முடியும்.
ஒத்திவைக்கப்பட்டுள்ள இடங்களில் தேர்தல் எப்போது என்பது பற்றி நாளை விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. பொய் காரணத்தை கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மனு.
*மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிபொருள் எடுத்து வந்த சந்தேகத்திற்கு உரிய மர்ம நபரின் புகைபடத்தை கர்நாடக காவல்துறை வெளியிட்டது.
கைப்பற்றபட்ட வெடிபொருளை விமான நிலையத்தில் இருந்து தொலைவில் எடுத்து சென்று வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர்.
*சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு.
அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*சென்னை மெரினாவில் கடந்த 12ஆம் தேதி கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு.
சிசிடிவி காட்சி வெளியிடப்பட்ட நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 7 மாத ஆண் குழந்தையுடன் இருந்த இளம்பெண் கைது. கடந்த 12ம் தேதி 7 மாத ஆண் குழந்தை மெரினாவில் கடத்தப்பட்டது. சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் ஒருவர் குழந்தையை கடத்தினார்.
No comments:
Post a Comment