அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*ஹெலிக்காப்டர் விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு.
ஹெலிக்காப்டர் விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
*திருப்பூர் : உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் முதலாம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு:
நீர் திறப்பு மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
*சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் 2வது நாளாக இலவச அனுமதி. நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் சுங்கச்சாவடி கணினிகள் சேதப்படுத்தப்பட்டன.
*ஏர்இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்க போவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏர்இந்தியா எக்ஸ்பிரஸில் 100%, இணைப்பு நிறுவனமான AISATSன் 50% பங்குகளும் விற்கப்படும் என அறிவிப்பு.
*மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிந்து 41,376இல் வர்த்தகமாகி வருகிறது
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 12,171இல் வணிகமாகிறது.
*ஒமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது:
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் - ஸ்டாலின், திமுக தலைவர்.
*குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கிய அரசு ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்:
கல்வித்துறை, எரி சக்தி துறை அதிகாரிகள் அதிரடி.
*தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்த
தடைகோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு.
தொல்லிய துறையின் அனுமதி பெறாமல் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடப்பதாக புகார்.
*டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சரியாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.
*குரூப் - 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்.
*குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மௌனமாக உள்ளது. மாநில உரிமை பறிபோவதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை.
மணமக்கள் மத்திய - மாநில அரசுகள்போல் அமைதியாக இருக்காமல் கேள்விகள் கேட்க வேண்டும் - திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.
*பாஜக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்-திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக பாஜகவினர் சாலை மறியல்.
பாஜகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு.
*அசாம் குடிமக்கள் பதிவேட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் இடம்பெறவில்லை என புகார்.
மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
*"ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது".
இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன். - சுப்ரமணியன் சுவாமி.
*மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்துவதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
சிஏஏ சட்டத்திற்கு எதிரான மனுக்களுடன் என்பிஆர் மனுக்களும் விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்.
*அசாம் குடிமக்கள் பதிவேட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் இடம்பெறவில்லை என புகார் - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
*மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு மட்டுமே என்பதிலிருந்து பின்வாங்க போவதில்லை.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு கருத்து. நீட் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கில் கருத்து.
*புதுச்சேரி சட்டமன்ற சிறப்புக்கூட்டம் பிப்பரவரி 12ந்தேதி கூட இருப்பதாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவிப்பு.
*சட்டவிரோத பேனர் வழக்கில் அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்?.
பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த சம்பவம், சட்டவிரோத பேனர்களுக்கு எதிரான வழக்குகளில் உயர்நீதிமன்றம் கேள்வி.
*அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம் அரசின் கைகளில் இருக்கும் சட்டம் ஒழுங்கு மற்றவர்கள் கைகளுக்கு மாறி வருகிறது - பொன் ராதாகிருஷ்ணன்.
*குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
*தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக நடைமுறைகள் அனைத்தும் இனி தமிழ் மொழியில் நடைபெறும் - துணைவேந்தர் பார்த்தசாரதி அறிவிப்பு.
*11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் உள்ளிட்ட பொருட்களை வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்ப வேண்டும்.
மாவட்ட அரசுத் தேர்வு உதவி இயக்குநர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவு.
*நிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்:
சாட்சியம் அளித்த நபரின் தகவல் நம்பகத்தன்மையற்றது என பவனின் தந்தை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
No comments:
Post a Comment